அரச வெசாக் விழா – 2022 பலாங்கொட குரகல வரலாற்று தளத்தில் நடைபெறவுள்ளது

தை 18th, 2022

அரச வெசாக் விழா – 2022 ஐ பலாங்கொடை குரகல வரலாற்றுத் தளத்தில் நடத்துவது குறித்து நேற்று (12) மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். குரகல வரலாற்றுத் தளத்தை மையமாகக் கொண்ட அரச வெசாக்
கொண்டாட்டங்களுக்கு அமைவாக குரகல வரலாற்றுத் தளத்தை புனிதப் பிரதேசமாக நியமிப்பதற்கு கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

அரச வெசாக் பண்டிகையை ஒட்டி, வெசாக் பக்தி பாடல் நிகழ்ச்சிகள், டன்சல்கள், வெசாக் விளக்குப் போட்டிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகள், விஷேட சமய நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள், கோவில்கள், தம்மப் பள்ளிகள்,
பிரிவேனாக்கள் ஆகியவற்றின் மேம்பாடு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வருடம் அரச வெசாக் பண்டிகைக்கு இணையாக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெசாக் பண்டிகைகளை ஏற்பாடு செய்வது குறித்து கவனம்
செலுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

குரகல புனித பிரதேசம் அமைந்துள்ள பலாங்கொடை மற்றும் கல்தொட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்திய பிரதமர், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன்
கலந்துரையாடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.