இலங்கையில் பௌத்த மதத்தையும் பௌத்த நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்காக பௌத்த அலுவல்கள் திணைக்களம் செயற்பட்டுக்கொண்டிருக்கும்போது அதே நடவடிக்கைகளுக்காக 1988ஆம் ஆண்டு யூன் மாதம் 16ஆம் திகதி ஓர் அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது.
அமைக்கப்பட்ட இந்த அமைச்சு முதல் தடவையாக முறையே புத்தசாசன அமைச்சு, சமய அலுவல்கள் மற்றும் கலாசார மேம்பாட்டு அமைச்சு என்ற வகையில் நியமிக்கப்பட்டது. அது பௌத்த அலுவல்கள் மற்றும் அதைத் தொடர்ந்த பணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இலங்கையில் ஏனைய அனைத்து மதங்களின் மேம்பாட்டுக்காக அது ஸ்தாபிக்கப்பட்டது.