முகப்பு » கௌரவ அமைச்சரின் செய்தி

கௌரவ அமைச்சரின் செய்தி

புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக சேவையாற்றக் கிடைத்தமையை எனது அரசியல் வாழ்க்கையில் மாபெரும் அதிர்ஷ;டமாகக் கருதுகிறேன். அதற்குக் காரணம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் புத்தசாசனத்தைப் பாதுகாப்பதற்கும் பேணிக் காப்பதற்கும் உள்ள பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகும். அத்துடன் ஏனைய மதங்களின் செயற்பாட்டையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துகின்ற அதேவேளையில் மத நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் நிலைநிறுத்தி ஒழுக்கமுள்ள பிரசைகள் நிறைந்த அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்கும் பாரிய பொறுப்பை இந்த அமைச்சு தாங்கி நிற்கிறது. மேலும் கலாசார அலுவல்கள் விடயத்தின் ஊடாக சாதி சமயம் போன்ற வேற்றுமைகள் அற்ற சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அமைச்சுக்கு இணைக்கப்பட்டுள்ள பாரிய பணிகளை நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன்.

இந்த அமைச்சின் பணியாட் தொகுதியினர் இந்த செயற்பணியை நிறைவேற்றுவதற்காக அனைத்து இலங்கை பிரசைகளுக்கு வழிகாட்டுவதோடு இந்த நாட்டை உலகின் முன்னணி அபிவிருத்தியடைந்த நாடாக்கும் இந்த மாபெரும் பணியை நிறைவேற்றுகின்றனர். மேலும் இந்த முக்கியமான அத்தியாவசிமான பொறுப்பை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கும், இந்து, கத்தோலிக்க மற்றும் முஸ்லீம் மத தலைவர்களையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

புத்தசாசனத்தைப் பாதுகாப்பதோடு அனைத்து மதங்களுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிப்பதையும் உறுதிப்படுத்துகின்ற அதேவேளையில் ஒழுக்க ரீதியாக அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்கு நம் அனைவருக்கும் சக்தியும் தைரியமும் கிட்டுக என வாழ்த்துகிறேன்.

மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சர் மற்றும்

புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர்