முகப்பு » செயலாளரின் செய்தி

செயலாளரின் செய்தி

சரியாக இரண்டு தசாப்தங்களை வெகுசன ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பவற்றில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்ட காலமாகக் குறிப்பிட முடியும். தற்பொழுது, உலகம் உலக கிராமமாக மாறியுள்ளதோடு, தகவல் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி புவியியல், பிராந்திய, தேசிய, சாதி அல்லது கலாசாரம் ஆகிய தடைகளை அழித்து ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் ஒன்றாக இணைத்துள்ளது. தற்பொழுது சைபர் ஸ்பேஸ் வெகுசன ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் பிரதான ஊடகமாகியுள்ளது.

ஸ்ரீ சம்புத்த தம்ம மனிதனை மையமாகக் கொண்ட உலக மத கோட்பாடகவுள்ளது. அது மனித சமுதாயத்தின் மத ரீதியான மேம்பாட்டோடு ஆன்மீக அபிவிருத்திக்கும் வழிகாட்டுகிறது. மேலும் இந்து மதம், இஸ்லாம், கத்தோலிக்க மதம் என்பவற்றின் மத போதனைகள் அனைத்தும் உயர்ந்த சமய கோட்பாடுகளாக இருக்கின்றன. அவை அன்பு, பொறுமை, சகவாழ்வு, அறச்செயல்கள் போன்றவை நிறைந்த ஒழுக்கமுள்ள மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு வழிகாட்டுகின்றன. வரலாறு, கலாசாரம், இலக்கியம், கலைகள் மற்றும் கைப்பணிகள் போன்ற அனைத்து துறைகளும் எந்தவொரு மனித சமுதாயத்தின் ஆக்கத்திறன் மிக்க வளர்ச்சியையும் அடையாளத்தையும் எடுத்துக்காட்டுகின்ற பிரதான குறியீடுகளாத் திகழ்கின்றன. இந்த அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் வருகின்ற மத, வரலாற்று, கலாசார மற்றும் அழகியல் துறைகளைப் பாதுகாத்தல், வெளியிடல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தகவல் தொழில்நுட்பம் அத்தியாவசியமான கருவியாக இருக்கின்றது.

இலங்கை கலாசாரத்தை வடிவமைப்பதில் வரலாற்று ரீதியான உந்து சக்தியாக இருக்கின்ற பௌத்தத்தை பேணிக் காப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அரசியலமைப்பின் மூலம் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, அரசியலமைப்பில் சொல்லப்பட்ட பொறுப்புக்களை யதார்த்தமாக்குவதற்கு பரவலாக இருக்கின்ற அநேகமான நடவடிக்கைகளை நிறைவேற்றுகின்ற பிரதான அரச பொறிமுறையாகத் திகழ்கிறது. மேலும், எமது அமைச்சு ஏனைய மதங்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் முகாமைப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் பொறுப்புகளை நிறைவேற்றுவதோடு எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மற்றும் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் முகாமைப்படுத்தும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுகிறது. குறிப்பாக அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற பிரகடனத்தின் இலக்கையும் நோக்கத்தையும் அடையும் செயற்பாடுகளையும் சரியான மற்றும் அத்தியாவசியமான தகவல்களையும் பரிமாற்றிக் கொள்ளுவதற்கு சங்கைக்குரிய மகா சங்கத்தினர்களுக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், இராஜதந்திர நிறுவகங்கள் மற்றும் சமூகங்கள் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் என்பவற்றிற்கு சொந்தமான ஏனைய மதகுருமார்கள், மக்கள், மாணவர்கள், கலைஞர்கள், கல்விமான்கள் ஆகியோருக்கும் இடையில் விரும்பத்தக்க மற்றும் வினைத்திறன் மிக்க இடைத் தொடர்புகளைக் கட்டியெழுப்பிக்கொள்ளும் நடவடிக்கைமுறையில் எமது அமைச்சின் இணையத்தளம் மிகக் காத்திரமாக அமையும் என நான் நம்புகிறேன்.

தேசபந்து பேராசிரியர் கபில குணவர்தன
செயலாளர்
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு