முகப்பு » நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

புண்ணியகிராமம் என்பதை வறுமையும் கடன் தொல்லையுமற்ற, சரியான போசாக்கு நிறைந்த மனித வளங்களுடன் தோதைப்பொருட்கள் இன்றி, அறிவுமயக்கமின்றி, தீய செயல்கள் இன்றி உயர் மனநிலையில் ஆனிமீகத்துடன், அறிவு நிறைந்த நன்னடத்தையுடன் விருத்தியடைந்த ஆளுமை கொண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்ற கிராமம் என வரைவிலக்கணப்படுத்த முடியும். கடந்த காலத்தில் இருந்த எண்ணக்கருக்களை உள்வாங்குவதன் மூலம், கிராமிய சமூகங்களுக்கிடையில் செயல்தூண்டலின் ஊடாக பௌத்த மத போதனைகளுக்கு அமைவாக பொருளதார நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டு கிராமமும் ஆலயமும் பௌத்த மதத்தை பேணிக்காப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் செயலாற்றுவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது. புண்ணியகிராமத்தின் நோக்கம் வளங்களை சமமாக நுகர்வதன் மூலம் தனிநபரை, குடும்பத்தை மற்றும் கிராமத்தைப் பாதுகாத்து சமத்துவத்தை ஏற்படுத்துவதாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காக ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக ஆன்மீக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களும் பௌதிக மற்றும் பொருளாதார நிகழ்ச்சித்திட்டங்களும் அமுல்படுத்தப்படுகின்றன.

பொருளாதார ரீதியாக சிறந்த கிராமத்தை விருத்தி செய்யும் நோக்கத்தில் கஷ;டங்களுக்கு முகம் கொடுக்கின்ற ஆலயங்களை விருத்தி செய்வதன் ஊடாக கிராமத்தில் உள்ள ஆலயத்துடன் அந்தக் கிராமத்து மக்களை இணைத்து நன்னெறிமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக 2018ஆம் ஆண்டு புத்தசாசன அமைச்சு புண்ணியகிராமம் நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்குத் திட்டமிட்டது.

புண்ணியகிராமம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுலாக்குவதற்கு முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித்திட்டமும் அதன் நோக்கமும்.

ஒழுக்க நெறியைப் பேணிக்காப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம்.

பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக நன்னெறிகளைப் பாதுகாப்பதற்கு உதவுகின்ற அதேவேளையில் ஆரோக்கியமான மற்றும் பொருளாதார ரீதியில் வலுவான சமூகத்தை உருவாக்குதல்.

சமூகத்துக்குள் மோசமான சமூக எதிர் நடவடிக்கைகள் வருகின்ற போக்கைக் குறைப்பதற்கு உதவுதல். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நல்ல உறவைக் கட்டியெழுப்புவதற்கு செயலூக்கமுள்ள பங்கீடுபாட்டாளராக செயலாற்றுதல்.

சிறந்த மட்டத்தில் தினசரி நடவடிக்கைகளில் பிக்குமார்களும் ஆலயமும் பங்கேற்பதற்கு உதவுதல்.

மத நடவடிக்கைகளுக்கு மட்டும் வரையறுக்காமல் விரிவான சமூக நடவடிக்கைகளுக்கு பிக்குமார்களின் செயலூக்கமுள்ள தலைமைத்துவத்தைப் பெறுவதற்கு ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
ஆலயங்களை மைய நிலையமாகக் கொண்டு பௌதிக மற்றும் பொருளாதார நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.

ஆலயங்களை மைய நிலையமாகக் கொண்டு அபிவிருத்தி செய்யக்கூடிய கிராமிய பொருளாதார முறைமையைக் கட்டியெழுப்புவதில் உதவுதல்.

சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் மற்றும் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல் போன்ற சமூக மதிப்பைக் குறைப்பதற்கு இட்டுச்செல்லும் பொருளாதார நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுவதற்கு கிராமிய பொருளாதாரத்தை வினைத்திறன் மிக்க, பொருளாதார அளவுகோலாக மாற்றுவதற்கு தேவையான தலைமைத்துவத்தை ஆலயங்கள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கைமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்.

கிராமிய சமூகத்தின் பயன்பாட்டுக்காக ஆலயத்தின் பொது கட்டிடமொன்றை அபிவிருத்தி செய்தல்.

ஆலயத்தை மையநிலையமாகக் கொண்டு கிராமிய தரவு முறைமையொன்றைப் பேணுதல். அதை பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த உதவுதல்.

வரவுசெலவு திட்ட முன்மொழிவு இலக்கம் 161ஐ அமுல்படுத்துவதற்கு பொது திறைசேரி 2018ஆம் ஆண்டுக்கு 250.00 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அத்துடன் புராதன ரஜமகா விஹாரைகள் மற்றும் தொல்பொருள் பெறுமதியுடைய வணக்கஸ்தலங்களை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு ஏற்பாடுகளின் கீழ் 175 மில்லியன் ரூபா புத்தசாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் பௌதிக திட்டமிடல் திணைக்களம் போன்ற அரச மட்ட நிறுவகங்களுடன் கலந்துரையாடி மேற்கொண்ட தீர்மானங்களுக்கு அமைவாக பிரதேச செயலக பிரிவுகள் மட்டத்தில் பெற்ற முன்மொழிவுகளின் ஊடாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக தொல்பொருளியல் திணைக்களத்தின் பரிந்துரையின் மீது பெறப்பட்ட இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் பணிகளும் வழிகாட்டும் பணிகளும் மேற்குறிப்பிட்ட திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்;தினால் அந் நாட்டில் அமைந்துள்ள பல மத வணக்கஸ்தலங்கள் சேதமடைந்துள்ளதோடு, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் உள்ள நீண்டகால இராஜதந்திர மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளையும் நிலநடுக்கத்;தினால் ஏற்பட்டுள்ள பாரிய சேதங்களையும் கவனத்திற் கொண்டு அந்த மத வணக்கஸ்தலங்களில் ஒன்றை அல்லது சிலவற்றை இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டில் புனரமைத்துக் கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நேபாளத்தில் அவ்வாறு சேதமடைந்த பௌத்த வணக்கஸ்தலமொன்றையும் இந்து கோவில் ஒன்றையும் இலங்கை அரசாங்கத்தினால் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் அந்த நாட்டில் அமைந்துள்ள பௌத்த விஹாரைகளுக்கிடையில் சேதமடைந்த சுயம்புநாத்தில் ஆனந்த கூட பௌத்த விஹாரையையும் லிலிட்பூரில் ராதோ மச்சிந்ரநாத் இந்து ஆலயத்தைப் புனரமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்தது தொடர்பில் அந் நாட்டு அதிகாரிகளின் சம்மதத்துடன் 2015 யூன் மாதம் 25ஆம் திகதி நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் சேதமடைந்த மீளக் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச உதவி மகாநாட்டில் இலங்கையின் பங்களிப்பை அறிவித்துள்ளது.