முகப்பு » அமைச்சின் வரலாறு

அமைச்சின் வரலாறு

இலங்கையில் பௌத்த நடவடிக்கைகளையும் புத்த மதத்தையும் மேம்படுத்தும் நோக்கில் பௌத்த அலுவல்கள் திணைக்களம் செயற்பட்டுக் கொண்டிருந்தபோது முதல்முறையாக அதே நடவடிக்கைகளுக்கு ஓர் அமைச்சு 1988ஆம் ஆண்டு யூன் 16ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

அவ்வாறு அமைக்கப்பட்ட இந்த அமைச்சு முதல் முறையாக புத்தசாசன அமைச்சாக, முறையே மத அலுவல்கள் மற்றும் ஒழுக்கநெறி மேம்பாட்டு அமைச்சாக மீள நியமிக்கப்பட்டது. அது பௌத்த அலுவல்களுக்கு அதைச் சார்ந்த அலுவல்களுக்கும் வரையறுக்கப்பட்டது. அது இலங்கையில் ஏனைய அனைத்து மதங்களின் மேம்பாட்டுக்காவும் ஸ்தாபிக்கப்பட்டது.

புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு 2010 ஏப்பிறல் 30ஆம் திகதியிட்ட வர்த்தமானி (அதி விசேட) அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் அமைச்சின் விடயப்பரப்பில் பௌத்த அலுவல்கள் திணைக்களம், முஸ்லீம் மத மற்றும் கலாசார அலுவல்கள் மற்றும் இலங்கை பொது நம்பிக்கை பொறுப்பு என்பனவும் உள்ளடங்குகின்றன. பிற்காலத்தில், புனித பிரதேசங்களைத் திட்டமிடுதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் இந்த அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் இந்த அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் வருகின்ற மேற் குறிப்பிட்ட திணைக்களங்களின் ஏனைய நடவடிக்கைகளும் 2010 நவம்பர்; 30ஆம் திகதியிட்ட வர்த்தமானி (அதி விசேட) அறிவித்தல் மூலம் இந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அதற்கு அமைவாக இந்த அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்ட குறிப்பிட்ட பணிகளில் கொள்கை தயாரிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஒழுக்கம் மிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக மத விழுமியங்களை மேம்படுத்துவதற்கான கருத்திட்டங்கள் மற்றும் பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை அமுலாக்குதல் மற்றும் அரசியலமைப்பில் வாசகம் 10 மற்றும் 14 (i) (உ) என்பவற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து மதங்களையும் பாதுகாப்பதோடு 09வது வாசகத்தில் விபரிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக பௌத்த மதத்தை பேணிக்காத்தல் என்பவையும் அடங்குகின்றன.

அதன் பின்னர் புத்தசாசன அமைச்சு 2015.01;.18ஆம் திகதியிட்ட வர்த்தமானி (அதி விசேட) அறிவித்தல் மூலம் மீள ஸ்தாபிக்கப்பட்டது. பௌத்த அலுவல்கள் திணைக்களம் மாத்திரம் இந்த அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு ஏனைய மதங்களுக்கு உரிய திணைக்களங்கள் இந்த புத்தசாசன அமைச்சிலிருந்து அகற்றப்பட்டு 21.09.2015ஆம் திகதியிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீள ஸ்தாபிக்கப்பட்டது.