அறிமுகம்
புத்தசாசன நிதியம் 1990ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க புத்தசாசன நிதிய சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற நியதிச்சட்ட நிறுவனமாகும். இது புத்தசாசன நிலைப்பாட்டுக்காக உறுதியான நிதியத்தினால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
புத்தசாசனத்தைப் பாதுகாப்பதற்கும் பேணிக் காப்பதற்கும்; உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதியத்தைப் பாதுகாப்பதற்கும் சட்டத்திற்கு ஏற்புடையதான ஏற்பாடுகளை உருவாக்குவதற்கும் முகாமைப்படுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் கௌரவ பிரதம அமைச்சரின் தலைமையில் கட்டுப்பாட்டுச் சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சபை பதவி வழியில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
புத்தசாசன நிதியம்
செயல்நோக்கு : பௌத்த கொள்கைகளைப் பாதுகாக்கின்ற ஒழுக்க விழுமியங்களுடன் பூரணத்துவமடைந்த ஒழுக்கம் மிக்க தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்குதல்.
செயற்பணி : புத்தசாசனத்தை பேணிக் காப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பிக்குமார்களின் சமூக அபிவிருத்திக்கும் ஆன்மீக அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்வதன் மூலம் புத்தசாசனத்தின் நிலைப்பாட்டுக்காக நடவடிக்கை எடுத்தல் மற்றும் ஆலயங்களின் முற்கூட்டி கோரப்பட்ட தேவைகளை மேம்படுத்துதல்.
விடயப் பரப்பெல்லை : 1990ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க புத்தசாசன நிதிய சட்டத்தின் கீழ் புத்தசாசன நிதியம் அமைக்கப்பட்டுள்ளதோடு, குறிப்பிட்ட அந்த புத்தசாசன நிதிய சட்டத்தின் மூலம் புத்தசாசனத்தைப் பேணிக்காப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நிறுவகங்களை அமைத்தல் மற்றும் புத்தசாசனத்தைப் பேணிக்காப்பதிலும் பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ள நிறுவகங்களை முகாமைப்படுத்துவதில் உதவுதல். மேலும் நிதியத்தின் செயற்பாடுகளுடன் இணைந்த மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஏனைய அனைத்து நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
புத்தசாசன நிதியத்தின் நிர்வாகம்
1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் மூலம் சட்டமாக்கப்பட்ட 1990ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க புத்தசாசன நிதிய சட்டத்தின் விதிகளுக்கு அமைய நிதியத்தை மேற்பார்வை செய்வதற்கு, முகாமைப்படுத்துவதற்கு மற்றும் நிர்வகிப்பதற்கு பின்வரும் ஆட்களைக் கொண்ட கட்டுப்பாட்டுச் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
- குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அல்லது அவரால் பெயர் குறிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர்.
- பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்பட்டவர்.
- புத்தசாசன விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அரசியலமைப்பின் 45வது பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- புத்தசாசன விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சின் செயலாளர்.
- பொது நம்பிக்கை பொறுப்பாளர் மற்றும்
- அதிமேதகு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்.
புத்தசாசன நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபை
- கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர்
- >புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.
- கட்டுப்பாட்டுச் சபையின் அங்கத்துவம்
- வண. கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரர் அவர்கள்
வேந்தர் – களனி பல்கலைக்கழகம்
பிரிவெனா தலைவர் – வித்தியாலங்கார பிரிவெனா, பேலியகொட. - வண. அதுரலியே ரத்தன தேரர் அவர்கள்
பாராளுமன்ற கௌரவ உறுப்பினர். - கௌரவ எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி
- புத்தசாசன அமைச்சின் செயலாளர்
- இலங்கை பொது நம்பிக்கைப் பொறுப்பாளர்.
- வண. கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரர் அவர்கள்
புத்தசாசன அலுவலக பணியாட் தொகுதியினர் ஒரு செயலாளரின் கீழ் இலக்கம்.115, விஜேராம மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரியில் செயற்படுகின்றனர். புத்தசாசன நிதியத்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் பணியாட் தொகுதியினர்களில் துணை பணியாளர்களாக ஒரு கணக்காளர், 05 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையிலிருந்து ஓர் உத்தியோகத்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புத்தசாசன நிதியத்தின் நடவடிக்கைகள்
1990ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க புத்தசாசன சட்டத்தில் ஒப்படைக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் பின்வரும் நடவடிக்கைகள் இணைந்துள்ளன.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து உதவிகளையும் நிதியங்களையும் ஏற்றுக்கொள்ளுதல்.
- நிதியங்களைச் சேகரித்தல் மற்றும் நிதியங்களை உற்பத்தி செய்தல்.
- வருமான வரியிலிருந்து விலக்கு பெறும் நோக்கில் புத்தசாசன நிதியத்திலிருந்து ஆலயத்திற்கு நன்கொடையாக அளித்த தொகைக்கு சமமாக ஒரு சான்றிதழை வழங்குதல்.
- புத்தசாசனத்தை மேம்படுத்துவதற்கு தம்ம புத்தகங்களை அச்சிடுதல்.
புத்தசாசனம் மற்றும் புத்தசாசன வாழ்வாதாரம் என்பவற்றின் நன்மைக்காக புத்தசாசன நிதியத்திலிருந்து பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன.
- இளம் பிக்குகளின் கல்வி நிறுவகத்திற்கு மாதாந்தம் நிதி உதவிகளை வழங்குதல்.
- இளம் பிக்குகளின் கல்வி நிறுவகங்களின் இளம் பிக்குகளுக்கு வருட இறுதி பர்Pட்சைகளை நடத்துதல்.
- இளம் பிக்குகளுக்கு விசேட மானியம் வழங்குதல்.
- ஆலயங்களின் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் சீல மாதாக்களின் துறவு இல்லங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்.
- நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள குறைந்த வசதிகள் உள்ள ஆலயங்களின் சமய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் பௌதிக தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பேணிக்காக்கும் நிறுவகங்களை அறிமுகப்படுத்துவதற்குமான நிகழ்ச்சித்திட்டம்.
- வயது முதிர்ந்து தாமே தீட்சை பெற்று துறவு பூண்ட பிக்குகளுக்கு அடிப்படை தர்மத்தைப் போதிப்பதற்கும் மதகுருமாரின் சடங்குகளைப்பற்றி அறிவுறுத்துவதற்குமான நிகழ்ச்சித்திட்டம்.
- உபசம்பதா பெற்ற பிக்குமார்களுக்கு மருத்துவ உதவி திட்டங்களை அமுலாக்குவதற்கான அடிப்படை செயற்பாடுகளில் கலந்துகொள்ளுதல்.
புத்தசாசன நிதியத்தின் நிதி தோற்றுவாய்களின் மூலங்கள்
1990ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க புத்தசாசன நிதிய சட்டத்திற்கு அமைவாக நிதியத்தின் நிதி சக்தியை மேம்படுத்துவதற்கு அனைத்து பங்களிப்புச் செய்யப்படுவதைப் பின்பற்றி புத்தசாசன நடவடிக்கைகளுக்காக நிதியங்களை சேகரிப்பதற்கும் உற்பத்திசெய்வதற்கும் புத்தசாசன நிதியத்தினால் நடவடிக்கை எடுத்தல்.
- நிதியத்திற்கு உள்நாட்டு நன்கொடை வழங்குநர்களின் பங்களிப்பு.
- அரச நிறுவகங்கள் அல்லது அரச திரட்டிய நிதியத்திலிருந்து மூலதன பங்களிப்புகள்.
- வெளிநாட்டு அரசுகள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து சிறப்பு நன்கொடைகள்.
- நிதியத்தை முதலீடு செய்வதிலிருந்து திரட்டிய வட்டி.
தம்ம வெளியீடுகளின் விற்பனை
- தம்ம வெளியீடுகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
- பாளி டிக்க வெளியீடு II
- தீகநிகாய டிக (சீலக்கந்த வக்க)
- தீகநிகாய டிக (மஹா வக்க)
- தீகநிகாய டிக (பத்திக்க வக்க)
- மஜ்ஜிம்மநிகாய முல பன்னசாக டிக – பாகம் I
- மஜ்ஜிம்மநிகாய முல பன்னசாக டிக – பாகம் II
- மஜ்ஜிம்மநிகாய மஜ்ஜிம பன்னசாக டிக
- மஜ்ஜிம்மநிகாய உபரி பன்னசாக டிக
- சன்யுக்தநிகாய டிக (சாகத வக்க)
- அங்குத்தரநிகாய கதா டிக மனோரதபுரானி என அறியப்படுவது
- அபிதம்மத்தா விப்ஹவானி டிக
- விசுதிமக்க டிக
- பாளி டிக்க வெளியீடு II
- புத்தசாசனத்தின் 2600 வருடங்கள் என்ற தலைப்பிலான வெளியீடு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலமைசாலிகளால் எழுதப்பட்ட கட்டுரைகளின் செய்யுள் திரட்டு 600 பக்கங்கள் – சிறப்பு கட்டுரைகளின் திரட்டு - பாளி அட்ட கதா மற்றும் ஏனைய தம்ம வெளியீடுகள்
புத்தசாசன நிதிய அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் கொள்வனவு செய்ய முடியும். - புத்த ஜயந்தி நினைவு விழா நாணயங்கள்
- 2600வது புத்த ஜயந்தி நினைவு விழாவைக் குறிக்குமுகமாக வெளியிடப்பட்ட புத்த ஜயந்தி பரிசு நாணயங்கள்
- புத்த சாசன நிதியத்திற்கு ரூபா 200,000/-க்கு மேற்பட்ட நன்கொடையை வழங்குகின்றவர்களுக்கு புத்த சாசன கௌரவ அமைச்சர் கைகளால் பரிசு நாணயங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
- சம்புத்தசாசனத்தை உயர்த்துவதற்கும் நிலையாகப் பேணுவதற்கும் மக்களிடமிருந்து நிதியங்களையும் நன்கொடைகளையும் பெற்றுக்கொள்ளுதல்.
புத்தசாசனத்தை உயர்த்துவதற்கும் நிலையாகப் பேணிக்காப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு மூலங்களிலிருந்து காசாக, அசையும் மற்றும் அசையா சொத்தாகப் பெற்றுக்கொண்ட எந்த நன்கொடைகளையும் புத்தசாசன நிதியத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியும்.
தற்பொழுது புத்தசாசன நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பௌத்த நடவடிக்கைகள்.
- இளம் பிக்குகள் கல்வி நிறுவகங்களுக்கு உதவிகளை வழங்குதல்.
- இளம் பிக்குகள் கல்வி நிறுவகங்களுக்கு மானியங்களை வழங்குதல்
- கஷடங்களுக்கு முகம்கொடுத்துள்ள ஆலயங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் முற்கூட்டியே கோரப்பட்ட வசதிகளை வழங்குதல்.
- 60 வயதுக்கு மேற்பட்ட இதுவரை தம்பதிவ யாத்திரை மேற்கொள்ளாத பிக்குகளுக்கு தம்பதிவ யாத்திரை மேற்கொள்ளுவதற்கு ஏற்பாடுகள் செய்தல்.
- பிக்குமார்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல்.
- இளம் பிக்குமார்கள் தம்ம (அறம் பற்றிய) அறிவைப் பெறுவதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை நடத்துதல்.
- புத்தசாசனத்தை மேம்படுத்துவதற்காக மக்களின் தம்ம (அறம் பற்றிய) அறிவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
காசு நன்கொடைகளை இலங்கை மத்திய வங்கியில் புத்தசாசன நிதிய கணக்கு இலக்கம் 51002இல் அல்லது கொழும்பு 07, இலங்கை வங்கி, டொரிங்டன் கிளையில் கணக்கு இலக்கம் 0075734470இல் வரவு வைக்க முடியும்.
நாடளாவிய ரீதியில் கஷ;டங்களுக்கு முகம்கொடுக்கின்ற ஆலயங்களுக்காக நன்கொடை வழங்குகின்றவர்களின் – பேணிக்காக்கும் நிறுவகங்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல்.
- இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் புத்தசாசன நிதிய அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டுள்ள 1500க்கு மேற்பட்ட ஆலயங்களில் கஷ;டங்களுக்கு முகம்கொடுத்துள்ள ஆலயத்தை எந்தவொரு நபர் அல்லது நிறுவகம் தெரிவுசெய்துகொள்ள முடியும். அத்துடன் சாசனத்தை மேம்படுத்துவதற்கு பேணிக்காக்கும் நிறுவகம்Æநபர் என்ற வகையில் அவர்கள் தம்மை பதிவுசெய்துகொள்ள முடியும்.
- நன்கொடையாக வழங்கப்பட்ட நிதியத்திற்கு உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டொன்று வழங்கப்படும். அரசாங்கத்தின் வரிச்சலுகையைப் பெறுவதற்கு அதைச் சமர்ப்பிக்க முடியும்.
புத்தசாசன நிதியத்திற்கு காசாக அல்லது வேறு விதமாக வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் 1990ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க புத்தசாசன நிதிய சட்டத்தின் 17ஆம் பிரிவுக்கு அமைவாகவும் 1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க வருமான வரி சட்டத்தின் 31வது பிரிவின் துணைப் – பிரிவு (2)இன் (ஆ) பந்திக்கு அமைவாகவும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.